பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் மங்கள்யான் விண்கலம், நவம்பர் 5–ந்தேதி செவ்வாய் கிரகத்துக்கு ஏவப்படும்

முதல்முறையாக.... ‘முதல்முறையாக இந்தியா வேற்று கிரகத்துக்கு அதாவது செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை அனுப்ப உள்ளது. இது இந்தியாவின் அறிவியல் ஆராய்ச்சியில் ஒரு மைல் கல் ஆகும்.

செவ்வாய் கிரகத்திற்கு விண்கலக் அனுப்பும் செயல்திட்டத்திற்கான தன்னுடைய கவுண்டவுனை ஆரம்பிக்கவுள்ளது இந்தியா.
எதிர்வரும் நவ.5ம் திகதி செவ்வாய் ஆர்பிட்டர் திட்டம் (Mars Orbiter Mission) தொடங்கப்படவுள்ளது. 9 மாதங்கள் தனது பயணத்தை மேற்கொண்டு எதிர்வரும் 2014 செப்டெம்பர் மாதம் செவ்வாய் கிரகத்தின் ஆர்பிட்டருக்குள் செல்லவுள்ளது இந்திய விண்வெளி ஓடம்.

செவ்வாய்க் கிரகத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியப்பாடுகளை அறியும் ஆராய்ச்சிக்காக இந்தியா தன்னிச்சையாக அனுப்பும் முதல் விண்லகலத் திட்டம் இதுவாகும். ஆனால் இவையெல்லாவற்றுக்கும் முதல், குறித்த விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய்க்கிரகத்தை சென்றடைவதை உறுதிப்படுத்தவே 85% வீதமான எமது உழைப்பு இருந்துள்ளது என்கிறார் இஸ்ரோ தலைவர் டாக்டர் கே.ராதாகிருஷ்ணன்.

கடந்த 18 மாதங்களாக இஸ்ரோ மேற்கொண்டு வந்த இச்செயற்திட்டத்திற்காக சுமார் ரூ.450 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஐந்து  வகையான பாகங்கள் இவ்விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றில் இரண்டு 260 பாகையில் பனோராமா வகையில் படப்பிடிப்பை மேற்கொண்டு பூமிக்கு அனுப்பவுள்ளதுடன், செவ்வாயில் நீர்க்கூறுகள் இருக்கின்றனவா என ஆராய்ச்சி மேற்கொள்ளப்படவுள்ளன.

மூன்றாவது பாகம், என்னவகையான வளிமண்டலம் அங்கு காணப்படுகிறது என ஆராய்ச்சி மேற்கொள்ளவுள்ளது. நான்காவது பாகமே மிக முக்கியமானது. என்னவகையான உயிர்வாழ்க்கை செவ்வாயில் நிலவுகிறது. அல்லது சாத்தியமானது என இது ஆராயவுள்ளது.  உலகின் ஐந்தே ஐந்து விண்வெளி மையங்களே செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பும் திட்டத்தை மேற்கொள்ளும் திறன் படைத்துள்ளன. இவற்றில் 45%வீதமான திட்டங்கள் தோல்வியிலேயே முடிந்துள்ளன. சில செவ்வாய்க்கிரகத்திற்கு சென்றடைவதற்குள்ளேயே தோல்வியில் முடிவடைந்துள்ளன. எனவே இந்தியாவின் இம்முயற்சி  தற்போது மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.

செவ்வாய் கிரகத்திற்கு அடுத்த வாரம் இந்தியா ராக்கெட் அனுப்பும் போது, வெறுமனே அதுவொரு விண்கலத்தை மட்டும் சுமந்து செல்லவில்லை. செவ்வாயில் உயிர்வாழ்க்கை சாத்தியமானதா எனும் சாதாரண, அடிப்படைக் கேள்விக்கான பதிலை தேடிக் கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான விஞ்ஞானிகளின் கனவுகளையும் சுமந்து செல்லவுள்ளது என்கிறார் இஸ்ரோ தலைவர் டாக்டர். ராதாகிருஷ்ணன்.

No comments:

Post a Comment