வியக்கத்தகு உண்மைகள்

24 மணி நேரத்தில்  சராசரி மனிதனின்:

heart

இதயம் 1,03,689 முறை துடிக்கிறது.


Image courtesy: www.childrenscolorado.org

நுரையீரல் 23.045 முறை சுவாசிக்கிறது.

இரத்தம் 16,80,000 மைல்கள் பாய்கிறது.

நகங்கள் 0,00007 அங்குலம் வளர்கின்றன

முடி 0,01715 அங்குலம் வளருகிறது


வாய் 2.9 பவுண்டுகள் நீரை (அனைத்து திரவ உட்பட) அருந்துகிறது

வயிறு 3.25 பவுண்டுகள் உணவு உட்கொள்கிறது.

மூக்கு 438 கன அடி காற்றை சுவாசிக்கிறது.

உடல்  85.60, டிகிரி  வெப்பத்தை இழக்கிறது.

வியர்வை சுரப்பிகள் 1.43 pints வியர்வையை  உற்பத்தி செய்கிறது.

வாய் 4,800 வார்த்தைகளை பேசுகிறது.

தூக்கத்தின் போது உடல் 25.4 முறை அசைகிறது.

 

Dehydration
  • உங்களுக்கு தாகம் எடுக்கவில்லையானால் நீங்கள் அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும். ஏனென்றால், ஏதோ ஒரு காரணத்தால் நம் உடலில் உள்ள நீர் சத்து முற்றிலும் தீர்ந்து விடுமானால் தாகம் எடுக்கும் செயல்பாடு நிறுத்தப்பட்டு விடுகிறது (the thirst mechanism shuts off).

  • சுவிங்கத்தை மென்று கொண்டே வெங்காயத்தை உரித்தால், கண்ணில் நீர் வராது.

  • உங்கள் நாக்கு இளஞ்சிவப்பு (pink)நிறத்தில் இருந்தால் மட்டுமே உங்கள் நாக்கில் கிருமிகள் இல்லையென்று பொருள் அன்றி வெண்மையாக இருப்பின் வெண்படலமாக பாக்டீரியா படர்ந்து இருக்கிறது என்று பொருள்.

  • SOS என்ற வானொலி அலை முதல் முதலாக டைட்டானிக் கப்பலில் பயன்படுத்தப்பட்டது

  • ஆச்சர்யமான விஷயங்களை பார்க்கும் போது மனிதனுடைய கண்கள் 45 சதவீதம் வரை விரிவடைகின்றன.

  • குகையை விட்டு வெளியேறும் வவ்வால்கள் எப்பொழுதும் இடது பக்கமாகவே திரும்புகின்றன.

  • தேன் மிக எளிதாக ஜீரனிக்க காரணம் அது ஏற்கனவே தேனீக்களால் ஜீரணிக்கப்பட்டுள்ளது.

  • சேவல்களால் அதண் கழுத்தை உயர்த்தாமல் கூவ முடியாது.

  • நாம் தும்மும் ஒவ்வொரு  தும்மலுக்கும் மூளையிலுள்ள உயிரணுக்கள் சில இறக்கின்றன.
  • இருதயத்துக்கு இடமளிப்பதற்க்காக உங்களது இடது பக்க நுரையீரல் வலது பக்க நுரையீரலை விட சிறியதாக இருக்கும்.


பறவை இனங்களில் ஆந்தை மட்டுமே  கண் சிமிட்டும் போது மேல் இமையை மூடுகிறது மற்ற அனைத்து பறவைகளும் கண்களை சிமிட்டுவது கீழ் இமையால்தான்.
owl
நீல வண்ணம் மனதை அமைதிப்படுத்தும் குணம் கொண்டது. அது மூளையை அமைதிப்படுத்தும் ஹார்மோன்களை வெளியிடத் தூண்டுகிறது.
blue
கூகுல் ( Google) என்ற சொல்லுக்கு உண்மையில் ஒரு கோடி பூஜ்ஜியங்களைக் கொண்ட  எண்களுக்கான  பொதுவான பெயர் ஆகும்.
google
டைட்டானிக் கப்பலை கட்ட 7 மில்லியன் டாலர்கள் செலவானது. ஆனால் அதைப்பற்றிய படம் எடுத்ததற்கு ஆன செலவு 200 மில்லியன் கள் செலவானது !?
titanic
மனித உடலில் இரத்தம் பாயாத ஒரே பகுதி கண் விழிகளின் வெண்படலம். அதற்கு தேவையான பிராணவாயுவை அது காற்றிலிருந்து நேரடியாக பெற்றுக்கொள்கிறது.
orth_cornea 


colgate-toothpaste
ஸ்பானிஷ் மொழி பேசும் நாடுகளில் கோல்கேட் டூத் பேஸ்ட்டை விற்க அந்த கம்பெனிகாரர்கள் பெரும் பாடுபட்டார்களாம் !? ஏன் தெரியுமா ? ’கோல்கேட்’ என்ற சொல்லுக்கு ’தற்கொலை செய்து கொள்’ என்று ஸ்பானிஷ் மொழியில் அர்த்தமாம்.
அறிவாளிகளின் முடியில் துத்தநாகம் மற்றும் செம்பு (zinc and copper) சதவீதம் மற்றவர்களைவிட அதிகமாக இருக்குமாம் !?
காந்தி ஃபேமஸ் மூன்று குரங்குகளின் பெயர் என்ன தெரியமா ? Mizaru மிஜாரு(தீயவை பார்க்காதே), Mikazaru மிகஜாரு (தீயவை கேளாதே), and Mazaru மஜாரு (தீயவை பேசாதே).
penguin
பறவைகளில் நீந்தக்கூடிய ஆனால் பறக்க இயலாத ஒரே பறவை பெங்குவின். அதேபோல் நிமிந்து நடக்ககூடிய ஒரே பறவையும் பெங்குவின்தான்.
germanshepherd
Image courtesy: http://www.pets4you.com
ஜெர்மன் ஷெஃபர்டு  இன நாய்கள் மற்ற இன நாய்களை விட மனிதர்களை  அதிகமாக கடிக்கிறதாம் !


Papilio_polyxenes3
photo courtesy: www.kidsbutterfly.org
கம்பளி பூச்சிக்கு மனிதனுக்கு உள்ள தசைகளை விட அதிக தசைகள் உள்ளன.
toilet_office
Image courtesy: channel9.msdn.com
ஒரு சராசரி அலுவலக மேஜையில், ஒரு சராசரி கழிப்பறையில் இருக்கும் பாக்டீரியாக்களை  விட 400 மடங்கு அதிக  பாக்டீரியாக்கள் உள்ளன.
polar bear feet
(புகைப்பட உதவி:http://www.polarbearsinternational.org)
உள்ளங்கள் கால்களில் முடியுள்ள ஒரே விலங்கு துருவக கரடி அல்லது பனிக்கரடி ஆகும்.
kiwi_egg_by_shnook
புகைப்பட உதவி: www.kamcom.co.nz
நியூசிலாந்தின் தேசிய பறவையான கிவி பறவை (kiwi) வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முட்டைகள் மட்டுமே இடும். இருப்பினும் அது அழியாமல் இருக்கிறது. உருவ அளவில் கோழியைப்போல் இருந்தாலும் அதண் முட்டை கோழியின் முட்டையை விட பலமடங்கு பெரியதாய் இருக்கும்.
goliathbeetle_0
Photo: Museum de Toulouse/Flickr
இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட வண்டுகளிலேயே மிக அதிக எடை உள்ளது கோலியாத் எனப்படும் வண்டாகும். அதன் எடை சுமார் 110 கிராம்கள் ஆகும். இது கிட்டத்தட்ட ஒரு ஆப்பிளின் எடை ஆகும்.


gty_orange_juice_thg_111214_wg
ஆரஞ்சு பழம் ஆரஞ்சு நிறத்தில் இருந்தாலும் அதன் சாறு மஞ்சள் நிறமாகும்.
images
இரவில் விழித்திருப்பதற்கும், சுறுசுறுப்புக்கும் நாம் காப்பி  சாப்பிடுவது வழக்கம். காப்பியில் உள்ள காஃபினே அந்த சுறுசுறுப்படைய வைக்கிறது. ஆனால்   ஒரு ஆப்பிளில் உள்ள இயற்கை சர்க்கரையில் ஒரு கப் காபியில் உள்ள காஃபினை விட அதிகமாக உள்ளது. எனவே, இனி பரிட்சைக்கு படிக்கும் போது காப்பிக்கு பதிலாக ஒரு ஆப்பிள் சாப்பிடுவது நல்லது.
images (1)
முட்டைக்கோஸில் தர்பூசணி போல நிறைய தண்ணீர் உள்ளது. தர்பூசணியில்92% தண்ணீரும், முட்டைக்கோஸில் 90% தண்ணீரும் உள்ளது. அடுத்ததாக  கேரட்டில்  87% சதவீதம் நீர் உள்ளது.
download
பூசணிக்காயை ஒரு காய்கறி இல்லை, அவை ஒரு பழங்கள்.
download (1)
வெங்காயமும் உருளைக்கிழங்கும் நீண்ட நாட்கள் சாதாரண நிலையிலேயே கெடாமல் இருப்பவை. ஆனால் அவை இரண்டையும் ஒன்றாக  சேமித்து வைக்கக் கூடாது.  ஏனெனில் அவற்றில் இருந்து உற்பத்தி ஆகும் வாயுக்களால் அவை சீக்கிரம் கெட்டுவிடும்.


தெரிந்த  பெயர் தெரியாத விபரம் !

946-xerox2
ஜெராக்ஸ்: இந்த வார்த்தையை கேள்விப்படாதவர்கள் இக்காலத்தில் இருப்பது அபூர்வம் ! புகைப்பட நகல் (Photo copy) என்ற அர்த்ததில் தான்  இந்த  வார்த்தை உபயோகப்படுத்தப்படுகிறது ! ஆனால் உண்மையில் ”ஜெராக்ஸ்” என்பது புகைப்பட நகல் (Photo copy) மிஷின் தயாரிக்கும் கம்பெனியின் பெயர் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ?  என்வே இம்முறை,  ஜெராக்ஸ், ஸாரி ! புகைபட நகல் எடுக்க செல்லும் போது ஜெராக்ஸ் என்று கூறாமல் Photo copy  என்றே கூறுங்கள் !
convent
கான்வெண்ட் என்பது கன்னியாஸ்திரீகள் வசிக்கும் இடம்

கான்வெண்ட் முன்புறத்தோற்றம் (Image courtesy: inetours.com)
பல ஆங்கில பள்ளிப்பெயர்கள்  ’……………கான்வெண்ட்’  என்று பெயரிடப்பட்டு இருப்பதை பார்த்திருப்பீர்கள் ! ’கான்வெண்ட்’ என்ற சொல்லுக்கு கன்னியா ஸ்த்ரீகள் வசிக்கும் இடம் என்பது பொருளாகும். பெரும்பாலான ஆங்கில கல்விகூடங்கள் அவர்களால், அவர்கள் வசிக்கும் இடங்களிலேயே நடத்தப்பட்டதால் அப்பெயர் வழக்கத்தில் இருக்கிறது. ஆனால், சாதாரண பிரஜைகளால் நடத்தப்படும் ஆங்கிலப்பள்ளிக்கும் அப்பெயரை இட்டு தங்கள் ’ஆங்கில அறிவை ‘ பறைசாற்றிக் கொள்பவர்கள் பற்றி என்ன சொல்ல !?
dalda
பாலிலிருந்து தயாரிக்கும் நெய்க்கு பகரமாக தாவர எண்ணெயிலிருந்து தாயாரிக்கப்பட்டதுதான ‘ வனஸ்பதி’ எனப்படும் விஜிடபிள் நெய்.  இதை தயாரித்த பிரபல கம்பெனியின் பெயர்தான் ’டால்டா’. ஆனால் அப்பெயரே வன்ஸ்பதி எண்ணெய்க்கு பெயராக மாறிவிட்டது !?

o.c.s.

 இலவசமாக எதையேனும் பெறுவதை  என்ன ‘ஓசி ’ யா என்று கேலியாக கேட்பது வழக்கம். இது தமிழகத்தை தவிர்த்து வேறெங்கும் உபயோகிப்பதாக தெரியவில்லை !
இச்சொல் எப்படி நடைமுறைக்கு வந்தது ? என்பது சுவாரசியமான விஷயம்.
ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்ட காலத்தில் அவர்களின் அரசுத்துறையை O.C.S. (The UK’s Office for Civil Societ y, part of the government’s Cabinet Office ) என்று குறிப்பிடுவார்கள். எனவே அரசாங்கம் தொடர்பான தபால்களில் ஸ்டாம்ப் ஒட்டப்படாமல்  on O.C.S. service  (இதையே On Company Service என்றும் கூறுவதுண்டு.) என்ற முத்திரை குத்தப்பட்டு இருக்கும். அப்படி வரும் தபால்களை தபால் இலாகா ஊழியர்கள்  o c s  என்று குறிப்பிடுவார்கள் அது காலப்போக்கில் மருவி  OC ஆகிவிட்டிருந்தது. அதே சொல் தபால் துறையை தாண்டி பொது வழக்கத்திலும் பயண்படுத்தபட்டு இன்று நாம் அன்றாடம் பயன்படுத்தும் சொல்களில் ஒன்றாக மாறிவிட்டது.
x – ray
யார் ? என்ன? என்று தெரியாதவற்றை ‘எக்ஸ்’ என்று குறிப்பிடுவது வழக்கம். ’எக்ஸ்ரே’ வுக்கு அப்பெயர் எப்படி வந்தது ?
எக்சு-கதிர்கள் என அழைக்கப்படும் இராண்ஜன் கதிர்கள் (Roentgen rays) 1895 நவம்பர் 8 ஆம் நாள் ஊர்சுபெர்க் பல்கலைகழகத்தில் பேராசிரியராக இருந்த வில்லெம் இராண்ஜன், குறூக்சு குழாயுடன் வளியில் மின்னிறக்கம் நிகழ்வதை ஆய்ந்து கொண்டு இருக்கும் போது தற்செயலாக, அருகில் இருந்த பேரியம் பிளாட்டினோ சையனைட் பூச்சுடைய ஒரு அட்டை ஒளிர்வதைக் கண்ணுற்றார். மின்னிறக்கம் நிகழும்போது ஒளிர்வதும் இல்லாத போது ஒளிராமலும் இருக்கக் கண்டார். இதற்கு குழாயின் சுவர்களிலிருந்து வெளிப்படும் புதிரான ஒருவகை கதிர்களே காரணம் எனக் கருதினார். இக்கதிர்களை அவர் எக்சு-கதிர்கள் என அழைத்தார். (நன்றி: விக்கிபீடியா )
வால்வ் ரேடியோ உட்புறத்தோற்றம் புகைப்பட உதவி vintageradio.me.uk
( டிரான்ஸிஸ்டர்) ரேடியோ
பல்வகையான டிரான்ஸிஸ்டர்கள்
ரேடியோக்கள் எனப்படும் வானொலிப்பெட்டிகள் தொடக்கத்தில் வால்வுகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டன. அவை அளவில் பெரியனவாகவும், அதிக மின்சக்தி தேவைப்பட்டதாலும் அவை கையடக்கமாக வெளியில் எடுத்துச்செல்லும் வகையில் தயாரிக்க இயலவில்லை. மின்னனுவியலில் மாபெரும் புரட்சிக்கு வித்திட்ட டிரான்ஸிஸ்டர் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் கைக்கு அடக்கமான சிறிய வானொலிப்பெட்டிகள் புழக்கத்திற்கு வந்தன.  டிரான்ஸிஸடர்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட வானொலிப்பெட்டிகள் டிரான்ஸிஸ்டர் ரேடியோக்கள் என்ப்பட்டன. அவை காலபோக்கில் டிரான்ஸிஸ்டர் என்று மட்டும் அழைக்கப்பட்டு டிரான்ஸிஸடர் என்றால் சிறிய அளவுள்ள வானொலிப்பெட்டிகளின் பெயரே ‘ ட்ரான்ஸிஸ்டர்கள்’ என்றாகிவிட்டது !.


0810-dump-your-sugar-bowl
womenshealthmag.com
மனிதன் அறிவுக்கு எட்டியவரை கெட்டுப்போகாத ஒரே உணவு தேன் மட்டுமே. எகிப்திய ஃபரோஸ் கல்லறைகளில் கிடைத்த தேனை  சாப்பிட்டு பார்த்து இதை  ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளார்கள்.( ஆதாரம்: விக்கிபீடியா)
thailan prince
Image courtesy: unbelievable-facts.tumblr.com/
1880 ல் தாய்லாந்து நாட்டின் ராணி தண்ணீரில் மூழ்கிகொண்டிருந்த போது பாதுகாவலளர்கள் பார்த்துக்கொண்டே நின்றார்களே தவிர யாரும் காப்பற்றவில்லையாம்.  ஏனெனில் ராணியை அவர்கள் தொடுவது தடுக்கபட்டிருந்ததாம்.( ஆதாரம்: விக்கிபீடியா)
underwater
Image source:farm4.staticflickr.com
பண்டைய ரோமர்கள் கி.மு. 25 ஆம் ஆண்டுகளில் கண்டுபிடித்த் நீருக்கடியில் பயன்படுத்தப்படும் கான்கிரீட் கலவையின் அடிப்படை ஃபார்முலாதான்  இன்றும் நீருக்கடியில்  பயன்படுத்தப்படும்  கான்கிரீட் கலவை உருவாக்கப்படுகிறது.( ஆதாரம்: விக்கிபீடியா)
Image courtesy: abovetopsecret.com
வேல்ஸ் (இங்கிலாந்து) கடற்கரையில் கடந்த 200 ஆண்டுகளில் ஒரே இடத்தில் மூன்று கப்பல்கள்  மூழ்கியுள்ளன. மூன்றும் மூழ்கியது டிசம்பர் 5 தேதிகளில்.  மூன்று விபத்துகளிலும் பிழைத்தவர்கள் ஒவ்வொருவர் மட்டுமே !. அவர்கள் மூவரின் பெயரும் ஹக் வில்லியம்ஸ் ! (ஆதாரம்:aol.com)
ram_bahadur_bamjan_meditating
பட உதவி: nepalrodi.blogspot.com
ராம் பகதூர் பொம்ஜன், என்கிற ஒரு இளம் புத்த துறவி,  ஒரு மரப்பொந்தில் உணவு அல்லது தண்ணீர் இல்லாமல் 10 மாதங்கள் தவம் இருந்த்தாக நம்பப்படுகிறது. இந்த நம்பமுடியாத கூற்றை பரிசோதிக்க, டிஸ்கவரி சேனல் 4  நாட்கள் நேரடியாக பகல் மற்றும் இரவு முழுவதும்  படமாக்கப்பட்டது. அதில் அவர் அந்த நான்கு நாட்களில் எவ்வித அசைவும் இன்றியும் வேறு எவ்விதமான தொடர்பும் இல்லாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. (பார்க்க வீடியோ ஆதாரம்) புத்த ஆதரவாளர்கள் அவரை “புத்தர் மறுபிறவி” என்கிறார்கள் (ஆதாரம்:documentarystrom.com)


duck
Image courtesy:  globalfacts.eu
வாத்தின் ‘க்வாக்’ சத்தம் ஏன் எதிரொலிப்பதில்லை என்ற காரணத்தை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை !
Image courtesy: hadeedcarpetcleaning.com
நம் வீட்டில் இருக்கும் தூசியில் பாதி நம் உடலில் இருந்து உதிர்ந்த பழைய தோல்கள் !
Image courtesy: momentsofmommyhood.com
உங்கள் முழங்கையை உங்களால் நக்க முடியாது !
Image Courtesy: pateljagruti.blogspot.com
எவ்வளவு மெலிதான காகிதமாக இருந்தாலும் ஏழு தடவைகளுக்கு மேல் மடக்க முடியாது !
தட்டச்சு பலகையில் ஒரு வரிசையில் உள்ள எழுத்துக்களை கொண்டு அடிக்க கூடிய பெரிய வார்த்தை TYPEWRITER !


Book-facts-Ernest-Vincent
Image courtesy:infactcollaborative.com
ஏர்னஸ்ட் வின்சென்ட் ரைட் என்பவர் 1939 – ல் எழுதிய  Gadsby, என்கிற 50.110 சொற்கள் உள்ள அந்த நாவலில்  E என்ற எழுத்தையே பயன்படுத்தவில்லை !
Crocodile-Tears
Image courtesy: libertyunyielding.com
சாப்பிடும் போது கண்ணீர் வடிக்கின்ற ஒரே விலங்கு  முதலை !
dolphin2008_ip
Image: kate.net
டால்பின்கள் ஒரு கண்ணைத் திறந்து வைத்துக்கொண்டு  தூங்கும் !
diving with blue whale
IMAGE COURTESY: best-diving.org
நீல திமிங்கலம் அன்றாடம் உண்ணக்கூடிய   உணவின் எடை சுமார்  3 டன். ஆனால். அதே நேரத்தில் அது 6 மாதங்கள் வரை உணவு இல்லாமல் வாழ முடியும்.
kiwi
பட உதவி: chem.cmu.edu
வாசனை உணர்வு மூலம் வேட்டையாடும் ஒரே பறவை கிவி (KIWI)பறவையாகும்.

olimbic
Image Courtesy:guardian.co.uk
ஒலிம்பிக் போட்டியில் வழங்கும் தங்க பதக்கங்களில்  92.5% வெள்ளி தானாம்  !?
Homelite-Matchbox
Image Courtesy: starseva.com
தீப்பெட்டி கண்டுபிடிக்கப்படுதற்க்கு முன்னால் சிகரெட் லைட்டர் கண்டு பிடிக்கப்பட்டுவிட்டது.
Eiffel-Tower-Paris-Night-France
Image Courtesy:flyproducoes.com
ஈபிள் கோபுரம் உயரம்  குளிர்காலத்தில் 6 அங்குலங்கள் குறைந்து விடும்.
joseph-wilson-swan
Image courtesy: commercial-lamps.co.uk
பத்துக்கு ஒன்பது பேர்  மின்சார விளக்கை முதன் முதலில் கண்டுபிடித்தவர்  தாமஸ் எடிசன் என்றுதான் நினைத்துக் கொண்டு்ள்ளனர். ஆனால் முதன் முதலாக மின்விளக்கை கண்டறிந்தவர்  ஜோசப் ஸ்வான் என்ற விஞ்ஞானி ஆவார்.
best-Happy-Birthday-Songs-list
Image Courtesy: musicnfilms.com
பிறந்தநாள் வாழ்த்து பாடலுக்கு  காப்புரிமை (copyright) உள்ளது .

giraafee
Image courtesy:kevinnicollecolvin.blogspot.de
ஒட்டகச்சிவிங்கியின் சராசரி எடை சுமார் 1400 கிலோவாகும். அதாவது கிட்டத்தட்ட ஒரு மினி லாரியின் எடை !
puunai
Image courtesy:biosthangappa.blogspot.com
பூனைகளின் கூட்டம் க்ளவுடர் (clowder) என்றும்; ஆண் பூனைகள டாம் (tom) என்றும்; பெண் பூனைகள் மோல்லி அல்லது க்வீன் (molly or queen) என்றும்; பூனைக்குட்டிகள் கிட்டன்கள் (kittens) என்றும் அழைக்கப்படுகினறன.
yaanai
Image courtesy: marabinmaindanmuthiah.blogspot.com
 யானைக்கு இயற்கை எதிரிகள் கிடையாது. சிங்கங்கள் அவ்வப்போது பலவீனமான, சிறிய யானைகளை தாக்கும். அதே வேளையில் அவற்றிற்கு மனிதனே மிகப்பெரிய எதிரியாக இருக்கின்றான். யானையின் தந்தம் போன்ற பொருட்களுக்காக அதிகமான யானைகள் மனிதர்களால் கொள்ள்பபடுகின்றன.
tigons
Image courtesy: lion_roar.tripod.com
சிங்கத்தையும் , புலியையும் இணைத்து உருவாக்கப்படும் கலப்பினங்களுக்கு (tigons and ligers) டைகன்ஸ் மற்றும் லைகர்ஸ் என்று அழைக்கப்படுகின்றன.
gorilla
Image courtesy: cliftonpeople.co.uk
விலங்கினங்களில் புத்திசாலியானதாக கொரில்லாகள் கருதப்படுகின்றன. அவை பலவிதமான கருவிகள் உபயோகிப்பதிலும், சைகைகள் செய்வதிலும் சிறந்து விளங்குகின்றனவாம். மேலும், போக்குவரத்து குறியீடுகளை கண்டுகொள்வதிலும் சிறந்து விளங்குகின்றவாம் !

Brainlobes
மனிதனின் மூளை விழித்திருக்கும் நேரத்தைவிட தூங்கும் போது அதிக ஆற்றலுடன் செயல்படுகிறதாம். இதற்கான காரணத்தை விஞ்ஞானிகளால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லையாம் !
iq-bell-curve
உங்கள் ஐக்யூ எனப்படும் அறிவாற்றல் அதிகம் இருந்தால் நீங்கள் அதிகமாக கனவு காண்பீர்களாம் !
face hair
Image courtesy: .sodahead.com
 முகத்தில் வளரும் புருவம், தாடி, மீசை போன்ற முடி உடலின் மற்ற பாகங்களில் வளரும் முடிகளை விட வேகமாக வளர்கிறது.
middle finger
Image courtesy: b3ta.com
கைவிரல்களில் நடுவிரலில் வளரும் நகம் மற்ற விரல்களில் வளரும் நகங்களை விட வேகமாக வளரும்.
toesnail
கால் விரல் நகங்களை விட கைவிரல்களில் வளரும் நகங்கள் நான்கு மடங்கு வேகமாக வளர்கின்றன.
hair
மனித முடியின் ஆயுட்காலம் மூன்றிலிருந்து ஆறு ஆண்டுகள்.
Stomach
நம் வயிற்றில் ஊறும் ஜீரண அமிலம் ஒரு துத்தநாக துண்டையும் கரைக்க வல்லது. ஆனால் இவை இரைப்பையின் சுவர்களை ஒன்றும் செய்வதில்லை. காரணம், அச்சுவர்கள் இடைவிடாமல் புதுப்பித்துக்கொண்டே இருப்பதுதான்.
heartbeat
பெண்களின் இருதயம் ஆண்களுடைய இருதயத்தை விட வேகமாக துடிக்கும்.
eye blink smiley
ஆண்களைப்போல் இரு மடங்கு கண்களை சிமிட்டுகிறார்கள் பெண்கள்.
smell
Image courtesy:5writer s5novels5months.com
ஆண்களை விட பெண்களுக்கு மோப்ப சக்தி அதிகம். இது அது அவர்களின் வாழ்நாள் முழுக்க தொடர்கிறது.


swimming pool
Image courtesy:ownersdirect.co.uk
மனிதன் வாழ்நாளில் வாயில் சுரக்கும் உமிழ்நீரை கொண்டு இரண்டு நீச்சல் குளங்களை நிரப்பலாம்.
burn_calories
Image courtesy:sparkpeople.com
தினமும் சுமார் 50 கலோரிகள் என்ற விகிதத்தில் பெண்களை விட ஆண்கள் உடலில் உள்ள கொலுப்புச் சத்து அதிகமாக செலவாகிறது
hiccups
Image courtesy:justanothermanicmommy.com
பெண்களை விட ஆண்களுக்கு விக்கல் அதிகம் வருகிறது
blood
Image courtesy:spinninghat.com
ஆணுக்கு சுமார் 6.8 லிட்டர் இரத்தமும் பெண்களுக்கு சுமார் 5 லிட்டர் இரத்தமும் உள்ளது.
sperm-fertilizing-egg
Image courtesy:scrapetv.com
மனித உடலில் உள்ள செல்களில் மிகப்பெரியது பெண்ணின் கருமுட்டை; மிகச்சிறியது ஆணின் உயிரணு.

surgeonfish
surgeon fish
அசைவ உணவுகளில் மீனுக்கு ஒரு சிறந்த இடமுண்டு. பொதுவாக உணவுக்கு பயன்படும் மீன்களை அறிந்திருக்கும் நாம் மிகவும் ஆபத்தான மீன்களைப்பற்றி இங்கு பார்க்கலாம். விஞ்ஞானிகள் கருத்துப்படி சுமார் 1,200 வகையான மீன் விஷத்தன்மையுள்ளதாகவும், இவற்றால் வருடத்திற்கு சுமார் 50,000 மனிதர்கள் பாதிக்கப் படுவதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இவ்விஷமீன்களால் ஒரு சில நன்மைகளும் இருப்பதாகவும் அவ்விஷத்தை கொண்டு பல்வேறு மருந்துகள் தயாரிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கண்ணை கவரும் வண்ணத்திலான கோடுகளை உடைய இந்த மீன் சர்ஜியான் மீன் (surgeon fish) என்று அழைக்கப்படும் இவ்வகை மீன் இந்தோ-பசிபிக் கடலில் வாழ்கின்றன். இம்மீன்களை எச்சரிக்கையுடன் கையாளவில்லையானால் அதன் வால் பகுதியில் அமைந்துள்ள கொடுக்கின் மூலம் விஷத்தை பாய்ச்சிவிடும்.
moray-eel
Moray eel மொராய் ஈல்
மொராய் ஈல் (Moray eel)எனப்படும் ஒருவகை விலாங்கு மீன் ஹவாய் தீவுகளிலுள்ள கோனா எனப்படும் நீர்நிலைகளில் வசிக்கின்றன. மற்ற மீன்களைப்போலன்றி இவற்றிற்கு ரம்பம் போன்ற கூர்மையான இரண்டடுக்கு பற்கள் இருக்கின்றன. ஒன்று வாய்ப்பகுதியிலும் மற்றொன்று இதன் தொண்டையின் உட்புறத்திலும் இருக்கின்றன.
toadfish
Oyster Toad fish
 Oyster Toad fish எனப்படும் இவ்வகை மீன்கள் நீரின் அடிப்பாகத்தில் பாசிச்செடிகளின் நிறத்தோடு, வலிமையான தாடைகளையும் பற்களையும் கொண்ட இம்மீன் சிப்பிகள், நண்டுகள், இறால், மீன், மீன் மற்றும் பிற கடல் உயிரினங்களை ஒரே அமுக்கில் நசுக்கி ஸ்வாகா செய்து விடுகிறது.
sea-anemone
கடல் அனிமோன்
கடல் அனிமோன் எனப்படும் இது மீனினம் அல்ல கடலுக்கு அடியில் வளரும் ஒரு வகை தாவரமாகும். பார்ப்பதற்கு அதன் பெயருக்கேற்ப அழகாக தோன்றினாலும், இது தன்னை கடந்து செல்லும் உயிரினங்கள் மீது ஒரு வகை அமிலத்தை உமிழ்ந்து அவற்றின் நரம்புகளை செய்லிலக்கச்செய்து அவற்றை ஈர்த்து உணவாக்கிக்கொள்கின்றன.
needlefish
Needlefish ஊசிமுனை மீன்கள்
 ஊசிமுனை மீன்கள் (Needlefish) பொதுவாக வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல கடல் மேற்பரப்பில் அருகே கூட்டம் கூட்டமாக காணப்படுகின்றன. இம்மீன்கள் அதி வேகத்தில் நீரின் மேற்ப்பரப்புக்கு வரக்கூடியவை. அப்படி அவை மேற்பரப்பில் பறக்க ஆரம்பிக்கும் போது மிகவும் ஆபத்தானவையாக மாறுகின்றன. இவை அரிதாகவே நடந்தாலும் அவற்றின் கூர்மையான முனைகள் மனிதர்களுக்கு தீவிரமான காயத்தையும் சில நேரங்களில் மரணத்தையும் உண்டுபண்ணுகின்றன. முக்கியமாக இரவில் மீன் பிடிக்கும் மீன்வர்களுக்கு இது பெரிய சவாலகவே இருக்கிறது. விளக்கு வெளிச்சத்திற்கு இவை கவரப்படுவதும் ஒரு காரணமாகும்.
நன்றி: நேஷனல் ஜியாகரபிக்.காம்
Source and Images: http://ocean.nationalgeographic.com/ocean/photos/ dangerous-sea-creatures/

1 comment: