உளவியல் சொல்லும் உண்மைகள்
1. அதிகம் சிரிப்பவர்கள் அதிகம் தனிமையில் வாடுபவர்கள்.
2. அதிகம் தூங்குபவர்கள், சோகத்தில் இருப்பவர்கள்.
3. வேகமாக அதே நேரம் குறைவாக பேசுபவர்கள், அதிகமாக ரகசியங்களை வைத்திருப்பவர்கள்.
4. அழுகையை அடக்குபவர்கள் மனதால் பலவீனமானவர்கள்.
5. முரட்டுத்தனமாக உண்பவர்கள் மன அழுத்தத்தில் இருப்பவர்கள்.
6. சின்ன சின்ன விஷயங்களுக்கும் அழுபவர்கள் அப்பாவிகள். மனத்தால் மென்மையானவர்கள்.
7. சின்ன சின்ன விஷயங்களுக்கும் கோபப்படுபவர்கள் அன்புக்காக ஏங்குபவர்கள்.
மனச்சோர்வு நோய் பற்றிய விளக்கம்
மனச்சோர்வு நோயுள்ளவர்கள் , அவர் சார்ந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்காக இந்த தாள் தயாரிக்கப்பட்டு உள்ளது.
இதை படித்தவுடன் மனச்சோர்வு நோய் பற்றி தெளிவு பெற்று அதுவும் ஒரு வகையான நோய் என்று நீங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறோம்.
நம்மில்
பலருக்கும் அவ்வப்பொழுது மனச்சோர்வு ஏற்படுவது இயற்கையே. இது சில மணி
நேரமோ அல்லது சில தினங்களோ இருந்து விட்டு நம்மை அறியாமலே நீங்கி விடும்.
ஆனால் மனச்சோர்வு நோய் உள்ளவர்களுக்கு இத்தகைய உணர்வு பல வாரங்கள் மற்றும் மாதங்கள் நீடிக்கும்.
இதனால் அவர்களின் தினசரி வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை மற்றும் அலுவலக வேலை எல்லாமே பாதிப்படையும்.
மனச்சோர்வு நோய்க்கான அறிகுறிகள்:
- 1. எப்பொழுதும் சோகமாக இருத்தல் ( மதியம் மற்றும் சாயந்திர வேளைகளில் இது சற்றே மாறலாம் )
- 2. வாழ்க்கை மேல் பிடிப்பு இல்லாமை .எதிலும் நாட்டம் மற்றும் மகிழ்ச்சி இல்லாமை.
- 3. சிறு விசயங்களில் கூட முடிவு எடுக்க முடியாத நிலை.
- 4. முன்பு எளிதாக செய்த வேலைகளை கூட செய்ய முடியாத நிலை.
- 5. எப்பொழுதும் உடல் சோர்வாக இருத்தல்
- 6. மனம் அமைதி இல்லாமல் சஞ்சலத்துடன் இருத்தல்
- 7. பசியின்மை. அதனால் உடல் எடை குறைதல். ( மிக சிலருக்கு அதிகமான பசி மற்றும் உடல் எடை கூடுதல் இருக்கலாம் )
- 8. தூக்கமின்மை. (தூக்கம் வருவதிற்கு அதிக நேரம் பிடிப்பது, முழு தூக்கம் கிடைக்காமல் அதிகாலை வேளைகளில் விழித்தல், முழு திருப்தி தராத தூக்கம் )
- 9. தாம்பத்திய உறவில் நாட்டமின்மை.
- 10. தன்னம்பிக்கை இல்லாமை,
- 11. தாழ்வு மனப்பான்மை, எதிர்காலத்தை பற்றிய வெறுமையான உணர்வு,
- 12. எளிதில் எரிச்சல் அடைதல்,
- 13. நண்பர்கள் மற்றும் உறவினர்களை சந்திக்கும் ஆர்வம் குறைந்து தனிமையை நாடுதல்.
- 14. வாழ்வதில் நாட்டமில்லாமல் தற்கொலை எண்ணம் மிகுதல், அதற்குரிய முயற்சிகளை செய்தல்.
- 15. அடிக்கடி தலைவலி மற்றும் உடம்பு முழுவதும் வலி, குடைச்சல் --இவை கூட மனச்சோர்வு நோய்க்கான அறிகுறிகளாக இருக்கலாம்.
உங்களுக்கு மனச்சோர்வு நோய் உள்ளது என்பதை அறியவே பல வாரங்களோ அல்லது மாதங்களோ ஆகலாம் .
நிறைய நேரங்களில் நீங்கள் அறிவதற்கு முன்பே , உங்கள் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள், (உங்கள் நடத்தையில் உள்ள மாற்றங்களை அறிந்து கொண்டு ) இதனை உங்களிடம் தெரிவிக்கும் நிலை வரலாம்.மனச்சோர்வு நோய் எதனால் ஏற்படுகிறது?
பெரும்பான்மையான
நேரங்களில் நம்மை மனதளவில் பாதிக்கும் நிகழ்ச்சிகள் மற்றும் மன உளைச்சல்
உருவாக்கும் விஷயங்கள் தான் மனச்சோர்வு நோய் உருவாவதற்கு காரணமாகிறது.
சில வகையான உடல் உபாதைகள் கூட மனச்சோர்வு நோயை உண்டாக்கும்.
சில நேரங்களில் எந்த விதமான மன உளைச்சலோ அல்லது உடல் உபாதைகளோ இல்லாத நேரத்திலும் மன சோர்வு நோய் உருவாகலாம்.
மனச்சோர்வுநோய் ஏற்படுவதற்கான காரணங்கள்:
குடும்ப சூழ்நிலைகளினால் ஏற்படும் பாதிப்பு. ( குடும்ப உறவில் சச்சரவு, மணவாழ்க்கையில் பிரச்னை, பணபிரச்சனை அலுவலகம் மற்றும் நண்பர்களுடன் பிரச்னை இவையாவும் இதில் அடங்கலாம் )
சிலவகையான
உடல்நலகேடுகள் (தை ராய்ட் நோய் பாதிப்பு , சில வகையான வைரஸ் நோய்கள்
தாக்குதலக்கு பின், சில வகையான புற்று நோய் பாதிப்புக்கு பின்னால்,
மாரடைப்புக்கு பிறகு, மூளை பாதிப்புகளுக்கு பின்னால்), மனச்சோர்வு நோய்
ஏற்படலாம் .
மேலே குறிப்பிட்டவை சில உதாரணங்களே .
மரபு வழியாகவும் மனச்சோர்வு நோய் வரலாம் . இதனால் சில குடும்பங்களில் அதிக பேருக்கு மனச்சோர்வு நோய் இருப்பதை காணலாம்.
குடிபழக்கம் அல்லது போதை பழக்கம் உள்ளவர்களுக்கு மனச்சோர்வு நோய் அதிகமாக வரலாம்.
மனச்சோர்வு நோய் உள்ளவர்கள் அதனை வெளியில் யாரிடமும் சொல்ல முடியாத நிலையில் மது பழக்கத்துக்கும் போதை பொருள் உபயோகத்திற்கும் அடிமை ஆவதற்கு நிறைய வாய்ப்புக்கள் உள்ளன.ஆண்களை விட பெண்களை இந்த நோய் அதிகமாக பாதிக்கும்.
உங்களுக்கு மனச்சோர்வு நோய் உள்ளதா?
நீங்கள் செய்ய வேண்டியது இதோ:
உங்கள் நோய்க்கு உரிய அறிகுறிகளை உங்கள் நெருங்கிய உறவினர்களோ அல்லது நண்பர்களிடமோ மனம் திறந்து கூறுங்கள்.
இதன் மூலம் அவர்களுக்கு உங்கள் செயல் மற்றும் நடவடிக்கைகளில் உள்ள மாறுதல்கள் மனச்சோர்வு நோயினால் ஏற்பட்டது என்று புரியும்.
நீங்கள் தினசரி செய்ய வேண்டிய வேலைகளை (மனம்
மற்றும்
உடல் சோர்வினால் ) பிறகு செய்து கொள்ளலாம் என்று ஒதுக்காமல் முடிந்த
வரை அப்பொழுதே செய்யப்பாருங்கள். ( அதிக நேரம் எடுத்தாலும் ).
பசியுணர்ச்சி இல்லாவிட்டாலும் அந்தந்த வேளைகளில் நல்ல சத்தான உணவு வகைகளை உட்கொள்ளுங்கள்.
நாள்தோறும் சரியான நேரத்தில் படுக்கைக்கு சென்று, சரியான நேரத்தில் எழுந்து விடுங்கள்.தூக்கம் வராவிட்டாலும் படுக்கையில் படுத்துக்கொண்டே புத்தகம் படித்துகொண்டோ, தொலைகாட்சி பார்த்துகொண்டோ இருங்கள்.
தூக்கம் வரவில்லை என்பதற்காக படுக்கையை விட்டு எழுந்து செல்லாதீர்கள்)
காலையில் விழித்தவுடன் உடனே எழுந்து விடுங்கள்.
உடல் மற்றும் மன அசதியினால், தூக்கத்தில் திருப்தி இல்லாத நிலை இருந்தாலும் கூட மேலும் படுக்கையில் படுக்காமல் உடனே எழுந்து விடுங்கள்.
இப்படி செய்தால் சில மணி நேரங்களில் நீங்கள் ஒருவாரான மனமலர்ச்சி அடைவீர்கள்.
அப்படி செய்யாமல் படுக்கையில், உறங்கினால், தூக்கமும் வராமல் மேலும் உடல் மற்றும் மனச்சோர்வை அடைவீர்கள்.
மனச்சோர்வு நோயினால், உருவாகும் தாம்பத்திய உறவின் மீதான நாட்டமின்மை, அந்நோய் குணமானவுடன் சரியாகி விடும். அதனால் இதை பற்றி மிகவும் கவலை கொள்ள வேண்டாம்.
தாங்களாகவே மனச்சோர்வுக்கு மருந்தாக மது அருந்த வேண்டாம்.
அது மனச்சோர்வை மேலும் அதிகப்படுத்தும் .
உங்கள் மனச்சோர்வுக்கு காரணம் ஆக உள்ள குடும்ப பிரச்னைகள், பணபிரச்னைகளை தீர்க்க முயற்சி செய்யுங்கள்.
ஒரு
நாளில் அரை மணியோ அல்லது ஒரு மணியோ உடல் பயிற்சி செய்யுங்கள். இது நடை
பயிற்சியோ அல்லது உங்களுக்கு பிடித்த விளையாட்டாகவோ இருக்கலாம்.
மேலும் செய்ய வேண்டியது:
· உங்கள் மருத்துவரிடம் சென்று, உங்கள் நோய் அறிகுறிகளை கூறினால், அவர் உங்களுக்கு மனச்சோர்வு நோய் உள்ளதா, அப்படி இருந்தால் எத்தகைய தீவிரத்தில் உள்ளது என்பதை கண்டறிந்து உடனே மருத்துவம் செய்வார்.
· தற்காலத்தில் இந்த நோயை குணமாக்க சிறந்த மருந்துகள் உள்ளன.
· அவை உங்கள் நோயை போக்கி உங்களை பழைய மனிதர் ஆக்கும்.
உங்கள் மருத்துவர் சில சமயங்களில் உங்களை மன நல மருத்துவரிடம் கலந்து ஆலோசிக்க பரிந்து உரைப்பார்.
இந்த நோயை குணமாக்க மனப்பயிற்சியும் உதவும்.
இத்தகைய மன பயிற்சியை அதற்குரிய பயிற்சி பெற்ற செவிலியர்கலோ அல்லது மன நல வல்லுனர்களோ வழங்குவர்.
- மனச்சோர்வு நோயை, நீங்கள் செய்த ஏதோ தவறினால் வந்தது என்று அணுகாமல் , ஒரு வகையான நோய் என்றும் , அது குணமாக்க வல்லது என்றும் புரிந்து கொண்டால் நீங்கள் விரைவிலேயே குணமடைவீர்கள்.
வெற்றிக்கு வழி
1. தினமும் அரை நாள் (12 மணி நேரம்) கடுமையாக உழையுங்கள்.
2. வாய்ப்புகளை திறக்கும் சாவி உழைப்புதான் என்பதை மறக்காதீர்.
3. வெற்றி ஒன்றையே மனம் நினைக்கவேண்டும்.
4. வெற்றி என்னும் ஏணியில் ஒவ்வொரு படியாகத்தான் ஏறவேண்டும்.
5. ஒரு மரத்தின் உச்சியை அடைய இரண்டு வழிகள் உண்டு. ஒன்று, யாராவது ஏற்றி விடுவார்கள் என்று காத்திருப்பது, மற்றொன்று நாமே ஏறுவது.
6. வியாபார அபாயங்களை கண்டு அஞ்சக்கூடாது.
7. பிடித்த காரியத்தை செய்யவேண்டும் என்பதைவிட செய்யும் காரியத்தை நமக்கு பிடித்ததாய் ஆக்கிக்கொள்ளவேண்டும்.
8. முடியாது, தெரியாது, நடக்காது, என்ற வார்த்தைகளை சொல்லவே கூடாது.
9. பாதுகாப்பாய் ஒரே இடத்தில் இருப்பது வளர்ச்சிக்கு உதவாது.
10. வெற்றிக்கு தேவை பாதி அதிர்ஷ்டம் பாதி அறிவு.

மனச்சுமையை நீக்க
ஒரு மனோதத்துவ வகுப்பில் ஒரு பேராசிரியர் ஒரு தம்ளரில் சிறிது தண்ணீரை
ஊற்றிக் கையில் ஏந்தியபடி மாணவர்களிடம் கேட்டார். “இந்தத் தம்ளர் எவ்வளவு
கனம் இருக்கும்?” என்று கேட்டார்.
மாணவர்கள் பக்கத்தில் இருந்து பல உத்தேச பதில்கள் வந்தன. ”ஐம்பது கிராம்... எழுபது கிராம்.... நூறு கிராம்.... நூற்றி இருபது கிராம்....”
பேராசிரியர் சொன்னார். “இதை எடை போட்டால் தான் உண்மையான எடை நமக்குத் தெரியும். ஆனால் இது ஒருவரால் மிக சுலபமாக சுமக்கும் கனம் தான், இல்லையா?”
“ஆமாம்” என்று மாணவர்கள் ஒருமித்த குரலில் சொன்னார்கள்.
பேராசிரியர் கேட்டார். “இதை நான் சில நிமிடங்கள் கையில் ஏந்திக் கொண்டிருந்தால் என்ன ஆகும்?”
”ஒன்றும் ஆகாது” மறுபடி ஒருமித்த குரலில் பதில் வந்தது.
”இதை நான் ஒரு மணி நேரம் அப்படியே பிடித்துக் கொண்டிருந்தால் என்ன ஆகும்”
“கை வலிக்கும்” என்று ஒரு மாணவர் சிரித்துக் கொண்டே சொன்னார்.
“உண்மை தான். சரி, நான் இதை ஒரு நாள் முழுவதும் இப்படியே பிடித்துக் கொண்டிருந்தால் என்ன ஆகும்”
”தாங்க முடியாத வலி ஏற்படும்”, “கை தசைகள் இறுகி கையை நகர்த்த முடியாமல் போய் விடும்”, “ஆஸ்பத்திரிக்குத் தான் போக வேண்டி வரும்”
என்று பதில்கள் வந்தன.
”அந்தப் பிரச்சினை ஏற்படுவது தம்ளரின் கனம் கூடுவதாலா?”
“இல்லை நீங்கள் தொடர்ந்து அதை பிடித்துக் கொண்டிருப்பதால் தான்”
”இந்தப் பிரச்சினை ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?”
ஒரு மாணவன் சுலபமாகச் சொன்னான். “அந்தத் தம்ளரை கீழே வைத்தால் போதும்”
பேராசிரியர் சொன்னார். “மிகவும் உண்மை. ஒன்றுமே இல்லை என்று சொல்லக்கூடிய ஒரு எடையைக் கூட தொடர்ந்து நிறைய நேரம் கையில் ஏந்திக் கொண்டே இருந்தால் அது உடலில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்த வல்லது. வாழ்க்கையில் எல்லா பிரச்சினைகளும் அப்படித்தான். அவற்றை உங்கள் மனதில் சிறிது நேரம் வைத்திருந்தால் பெரிய பாதிப்பு இல்லை. ஆனால் அவற்றை நிறைய நேரம் சுமக்க ஆரம்பித்தால் சின்னப் பிரச்சினை கூட உங்களுக்கு வலியை ஏற்படுத்தி விடும். அதையே நாள் கணக்கில் சுமக்க ஆரம்பித்தால் அது உங்களை வாழ்க்கையையே ஸ்தம்பிக்க வைத்து விடும். அதனால் எந்த சுமையையும் இரவு தூங்கப் போகும் முன் கீழே இறக்கி வைத்து விட்டு உறங்கச் செல்லக் கற்றுக் கொள்ளுங்கள். வாழ்க்கை எளிதாக இருக்கும். மறு நாளைய பிரச்சினைகளைச் சமாளிப்பது சுலபமாகும்”
மிக அழகான ஒரு உவமை இது. நமக்கு மனதில் சுமைகளை ஏற்றிக் கொண்டே போகத் தெரிகிறதே ஒழிய இறக்கி வைக்கத் தெரிவதில்லை. சுமைகள் கூடிக் கொண்டே போகும் தான் நம்மால் புதியதாக சின்னப் பிரச்சினை வந்தால் கூட அதை சமாளிக்கத் தெரிவதில்லை. ”ஐயோ இதுவுமா” என்று மலைத்துப் போய் விடுகிறோம். ஒவ்வொரு பிரச்சினையாக எடுத்துப் பார்த்தால் அதை சமாளிப்பது சுலபமாக இருக்கும். பெரும்பாலானவை தனித்தனியாக அணுகும் போது அப்படி சமாளிக்க முடிந்தவையே. ஆனால் பிரச்சினைகளை சேர்த்து வைத்துக் கொண்டே சுமந்து நின்றால் அதன் பின் கூடும் எல்லாச் சின்னப் பிரச்சினைகளும் தாங்க முடியாதவையாக மாறி விடுகின்றன.
ஒன்று மட்டும் நினைவில் வைத்துக் கொள்வது நல்லது. சுமந்து கொண்டே இருப்பதால் கனம் கூடுமே ஒழிய குறையாது. இறக்கி வைத்தால் மட்டுமே கனம் குறையும். எனவே அவ்வப்போது மனதின் சுமைகளை இறக்கி வைக்கப் பழகிக் கொள்ளுங்கள். புதிதாக வருவதை சமாளிப்பது சுலபமாகும். வாழ்வின் இனிமைகளை ரசிக்க மனதில் இடம் பாக்கி இருக்கும்!

வாழ்கையில் பல வழிகள்
பாரசீக மன்னன், சுல்தான் இருவருக்கு மரண தண்டனை கொடுத்தான். அதில் ஒருவன் அரசனிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தான். “அரசே! எனக்கு ஒரு வருடம் தவணை கொடுத்தால் உங்கள் குதிரையை பறக்க வைப்பேன். உலகிலேயே பறக்கும் குதிரை ராஜா என்ற சிறப்பு பெயர் உலகில் உங்களுக்கே” என்றான். அரசனுக்கு மனதிற்குள் ஆசை கிளம்பியது. அதற்கு ஒப்புக் கொண்டான்.
இதைப் பார்த்த இரண்டாம் கைதி அவனிடம் “ஏண்டா, ஒரு வருடத்தில் எப்படி உன்னால் குதிரையைப் பறக்க வைக்க முடியும்?” . என்றான். அதற்கு அவன், “அடுத்த ஒரு வருடத்தில் அரசனின் மனம் மாறலாம். அல்லது அரசன் இறக்கலாம். அல்லது குதிரை இறக்கலாம். அல்லது ஒருவேளை குதிரைக்கே பறக்கும் நிலைமை ஏற்படலாம். இப்படி எத்தனையோ வாய்ப்புகள் இருக்கிறதல்லவா?” என்றான்.
தற்கொலை செய்வோரை எடுத்துக் கொண்டால் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொண்டு (பணம், காதல், தொழில்) அதனோடு உணர்ச்சிப்பூர்வமாக சிக்கிக் கொண்டு அதில் நினைத்தபடி நடக்காத போது எல்லாமே போய் விட்டது என்று முடங்கி, உணர்ச்சிகளின் அடிப்படையில் எடுக்கின்ற முடிவின் விளைவு என்பதுதான்.
வாழ்க்கையில் சரியாக நடப்பது ஒரு அம்சம். எதிர்பாராதபடி நடப்பது மற்றொரு அம்சம். இந்த இரண்டாவதில் தான் அனுபவம் என்ற மிகப்பெரிய விஷயம் கிடைக்கும். அதைப் பெறுவது தோல்விகளில்தான். வாழ்க்கையின் முக்கிய திருப்பங்களை கொடுத்து உயரச் செய்வதே இந்த அனுபவங்கள். ஒரு வழி சரியில்லையா? இரண்டாவது வழி. அது சரியில்லையா? மூன்றாவது வழி? அதுவும் சரியில்லையா? நான்காவது வழி, வாழ்க்கையில் இப்படி பல வாய்ப்புகள். ஒரே கதவை பிடித்து தட்டிக் கொண்டு திறக்கவில்லையே என முட்டிக் கொள்ளத் தேவையில்லை.
நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே.
மத்தியான வெயில் கொளுத்திக்கொண்டிருந்தது.மரத்தடியில் ஒருவன் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தான்.
அந்த வழியாக வந்த விறகுவெட்டி அவனைப்பார்த்தான்.
“கடுமையான உழைப்பாளியாக இருக்க வேண்டும் உழைத்த
களைப்பால் தான் இந்த வெயிலிலும் இப்படிஉறங்குகிறான்.”
என நினைத்துக் கொண்டே சென்றான்.
அடுத்ததாக திருடன் ஒருவன் அந்த வழியாக வந்தான்
“இரவு முழுவதும் கண்விழித்து திருடி இருப்பான் போல
தெரிகிறது அதனால்தான் இந்த சுட்டெரிக்கும் வெயிலிலும்
அடித்துப் போட்டது போல் தூங்குகிறான் “
என நினைத்துக்கொண்டே சென்றான்.
மூன்றாவதாக குடிகாரன் ஒருவன் அந்த வழியாக வந்தான்.
“காலையிலேயே நன்றாக குடித்துவிட்டான் போல இருக்கிறது
அதனால்தான் குடிமயக்கத்தில் இப்படி விழுந்து கிடக்கிறான்
என நினைத்துக்கொண்டே சென்றான்.
சிறிது நேரத்தில் துறவி ஒருவர் வந்தார்.
இந்த நண்பகலில் இப்படி உறங்கும் இவர் முற்றும் துறந்த
ஞானியாகத்தான் இருக்க வேண்டும் வேறுயாரால்
இத்தகைய செயலை செய்ய முடியும்” என அவரை வணங்கி
விட்டு சென்றார்.
"நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே"
No comments:
Post a Comment