சாதனை நாட்கள்

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

einstein210ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அநேகமாய் அனைத்து காலத்திலும் மிகவும் பிரபலமான விஞ்ஞானி ஆவார்.
அவருடைய பிரதிநிதித்துவம் மற்றும் அவர் வெளிக்கொணர்ந்த அந்த அற்புதமான  இயற்பியல் கோட்பாட்டு இன்றைய   இளம் விஞ்ஞானிகளுக்கு ஒரு உத்வேகமாக செயல்படுகிறது.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீனைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள், மேற்கோள்கள் மற்றும்  தகவல்கள் சில.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மார்ச் 1879 14 ஆம் தேதி பிறந்தார்.
ஒரு யூத குடும்பத்தில் ஜெர்மனியில் பிறந்தார்,  இயற்பியல் துறையில் இவரது  பங்களிப்பு மிக முக்கியமானதாகும்.
சிறு வயதிலேயே கணிதத்திலும், அறிவியலிலும் இவர் அளவற்ற ஆர்வம் கொண்டிருந்தார். இவற்றின் மீது அவருக்கு ஆர்வமும், பகுத்தறியக்கூடிய திறனும் இவருக்கு இயற்கையாகவே அமைந்திருந்தன.
பட்டப்படிப்பை முடித்த பின்னர் அவர்  காப்புரிமை வழங்கும் அலுவலகத்தில் மின்காந்த சாதனங்களுக்கு காப்புரிமைகள் மதிப்பீடு செய்யும் வேலையை செய்து வந்தார்.
அவர்  மிக பிரபலமான சமன்பாடான : E = MC ² (ஆற்றல் =  நிறை ஒளியின் வேகத்தின் இருமடங்கு). உருவாக்கினார்
e=mc
புகைப்பட உதவி :விக்கிபீடியா
மேலும் அவருடைய சார்பியல் கோட்பாடு (theory of relativity.) மிகவும் பிரபல்யமானதாகும். தனது  ”Electrodynamics of Moving Bodies”  என்ற கோட்பாட்டினை  1905 ல் சமர்ப்பித்தார்.
ஐன்ஸ்டீனுக்கு அவரது இயற்பியல் கோட்பாடு கண்டுபிடிப்புக்கு  1921 ல் நோபல் பரிசினை வென்றார்.
அவரது புகழ்பெற்ற பிறகோட்பாடுகள்:
புவியீர்ப்பு மூலம் ஒளி விலகல்.
திட அணு இயக்க குவாண்டம் கோட்பாடு,
பிரௌனி இயக்கம்,
நுண்புழை விளைவு பற்றிய விளக்கம். மற்றும் பல
Brownian-motion-of-particle
ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின்  பிரபலமான மேற்கோள்களில் பின்வருபவையும் அடங்கும்;
”ஒரு விஷயத்தை கண்காணிக்க முடியுமா ? முடியாதா என்பது நீங்கள் எடுத்திருக்கும் கோட்பாட்டினை சார்ந்ததாகும். நீங்கள் கொண்டிருக்கும் கொள்கைதான் எதை கண்காணிக்க முடியும் என்பதை தீர்மானிக்கின்றது.”
” நான் ஒரு இயற்பியல் விஞ்ஞானி ஆகவில்லை என்றால் ஒரு இசைகலைஞனாகி இருப்பேன். நான் அடிக்கடி இசையைப்பற்றி யோசித்துக்கொண்டு இருப்பேன். என் பகல் கனவு இசையிலேயே கழியும். நான் வாழ்க்கையை இசையின் அடிப்படையிலேயே பார்க்கிறேன். என்னுடைய வயலினில் இருந்து வெளிப்படும் இசையில் நான் என் வாழ்கையின் அதிகப்படியான மகிழ்ச்சியினை காண்கிறேன்.” என்றார்.
e=mc statue germany
ஜெர்மனியில் அமைக்கப்பட்டுள்ள 3 மீட்டர் உயர ஐன்ஸ்டைனின்1905 E = mc2 சமன்பாடு
நன்றி: விக்கிபீடியா தமிழ்

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்  1955,   ஏப்ரல் 18 அன்று மரணமடைந்தார்.


அரிஸ்டாட்டில்

Aristotleஅரிஸ்டாட்டில் பல்வேறு துறைகளில் பரந்த அறிவு கொண்ட மிகப் பெரிய தத்துவ மேதை.  பல்வேறு துறைகளில் பயின்ற அவர்,  தான் கற்ற இயற்பியல், கவிதை, விலங்கியல், தர்க்கம், சொல்லாட்சி, அரசியல், அரசு, நெறிமுறைகள், மற்றும் உயிரியல் போன்ற ஒவ்வொரு துறையிலும் பல்வேறு ஆக்கங்களை இவ்வுலகிற்கு அளித்திருக்கிறார்.
இந்த  கிரேக்க தத்துவவாதி 384 கிமு Stagira என்ற ஊரில் பிறந்தார். அவரது தந்தை நிகோமசுஸ்,  மாசிடோனியா மாகானத்தின் ராஜாவான  Amyntas III  மருத்துவராக பணியாற்றினார். அவர்களின் முன்னோர்களும் இதே தொழிலில் இருந்ததாக நம்ப்பபடுகிறது.
ஆரம்ப காலத்தில் தன் தந்தையிடம் வீட்டில் இருந்தபடியே மருத்துவத்தை கற்றார். அந்த மருத்துவ அறிவு அவரின் இயற்கை நிகழ்வுகள் பற்றிய  ஆராய்வுக்கு  வழிவகுத்தது. அவரது 18 வது வயதில் , மற்றொரு பெரிய கிரேக்க தத்துவவாதியான பிளாட்டோவிடம் மாணவ்ராக சேர்ந்து குறுகிய காலத்திலேயே அவருக்கு பிடித்தமான மாணவராக மாறினார்.
அறிவியலில்  அவரது பங்களிப்பு, பிற்காலத்தில் அறிவியல் வளர்ச்சிக்கு மிக உறுதுணையாக இருந்தன. குறிப்பாக அவர் தந்து வாழ்க்கையின் பெறும் பகுதியை இயற்கை அறிவியல் ஆய்வுகளிலேயே செலவிட்டார். அவர் செயத ஆராய்ச்சிகளை கணக்கியலோடு தொடர்பு படுத்தாமல் (reference to the Mathematics) இருந்த்து மிகப்பெரிய பின்னடைவாக பிற்கால அறிவியல் அறிஞர்களால் நிரூபிக்கபட்டது.
அவரது இயற்கை அறிவியல் சார்ந்த ஆராய்ச்சி தாவரவியல், விலங்கியல், இயற்பியல், வானவியல், வேதியியல், மற்றும் வானிலை, வடிவியல் மற்றும் பல அடங்கும்.
அவர் மாவீரர் மகா அலெக்சாண்டருக்கு ஆசிரியராகவும் இருந்தார். இந்த மாபெரும் தத்துவ  மேதை  கி.மு. 322 இறந்தார்.
புகைப்பட உதவி: விக்கிபீடியா

No comments:

Post a Comment