அறிவியல் பொம்மைகள்

சிறு குழந்தைகளின் விளையாட்டு உபகரணங்களில் ஒன்றான Seesaw எனப்படும் இச்சாதனத்தை அனைத்து சிறுவர் பூங்காக்களிலும், பள்ளி விளையாட்டுத்திடல்களிலும் காணலாம். அதனடிப்படையில் செயல்படும் ஒரு எளிய இயற்பியல் பரிசோதனையை இங்கு காண்போம்.
candle seesaw
எச்சரிக்கை: இப்பரிசோதனைக்கு பெரியவர்களின் மேற்பார்வை மிகவும் அவசியம்.

தேவையான பொருட்கள்:
  1. நீளமான மெழுகுவர்த்தி
  2. இரண்டு ஒரே உயரமுள்ள கண்ணாடி குவளைகள்
  3. மூன்றல்லது நான்கு அங்குலம் நீளமான மெல்லிய கம்பி (சைக்கிள் சக்கர கம்பி போன்றவை)
  4. தீப்பெட்டி
செய்முறை:
மெழுகுவர்த்தியின் ஒரு பக்கம் நெருப்பை பற்ற வைப்பதற்க்கு ஏற்ப திரி சிறிதளவு வெளியில் நீண்டு கொண்டும் பின் பக்கம் தட்டையாகவும் திரி மெழுகின் உள்ளே அமிழ்ந்திருக்கும். இங்கு நமக்கு இருபுறமும் நெருப்பு பற்றவைக்க வேண்டியிருப்பதால் தட்டையாக இருக்கும் அடிப்பாக்ததில் சிறிதளவு மெழுகை நீக்கி விட்டு திரியை பற்றவைப்பதற்கு ஏற்றவாறு அமைத்துக்கொள்ளவும்.
மெல்லிய நீண்ட கம்பியை எடுத்து மெழுகுவர்த்தியின் நடுப்பாகத்தில் கவனமாக சொருகவும். கம்பியை நெருப்பில் காட்டி சூடுபடுத்திக்கொண்டால் மிக எளிதாக நுழைத்து விடலாம்.
seesaw
புகைப்பட உதவி wpcliparts.com
வெப்பத்தால் பாதிப்பு ஏற்ப்படாத   இடத்தில் இரண்டு கண்ணாடி குவளைகளை ஒன்றிற்கு ஒன்று அருகில் தலைகீழாக கவிழ்த்தி  மெழுகுவர்த்தியில் நுழைத்த கம்பியின் இருஓரங்களும் கண்ணாடி குவளைகளின் அடிப்பாகத்தில் இருக்குமாறு படத்தில் காட்டியவாறு அமைக்கவும்.
மெழுகுவர்த்தியின் இருபுறங்களிலும் நெருப்பை பற்ற வைக்கவும். சிறிது நேரத்தில் மெழுகுவர்த்தி தானாக இருபக்கங்களிலும் ஏறி இறங்கும் காட்சியை கண்டு களிக்கவும்.

பலூனில் இயங்கும் படகு


தேவையான பொருட்கள்:
  • சதுர அல்லது செவ்வக  வடிவிலான பிளாஸ்டிக் டப்பா (ஸ்வீட் அடைத்து வரும் பெட்டிகளை உபயோகித்திக்கொள்ளலாம்.
  • பலூன்
  • குளிர்பானம் குடிக்க பயன்படுத்தும் பெரிய  உறுதியான ஸ்ட்ரா
  • ரப்பர் பேண்ட்
  • ஒட்ட பயன்படும் M Seal  (களிமண் போன்று இரண்டு கலவைகளாக இருக்கும் இவற்றை தேவையான அளவு எடுத்து ஒன்றாக சேர்த்து பயன்படுத்த வேண்டும். காய்ந்தவுடன் கெட்டியாகி விடும் பின்பு உபயோகப்படுத்த இயலாது. என்வே தேவையான அளவு மட்டுமே கலந்து கொள்ளவும். உபயோகித்த பின் கைககளை சுத்தமாக கழுவிக்கொள்ளவும். சிரியவர்கள் பெரியவர்களின் துணையோடு இதை செய்யவேண்டும்.)
  • கத்தரிக்கோல்
  • பிளாஸ்டிக் டப்பாவில் ஸ்ட்ரா நுழையும் அளவு ஓட்டை போட ஏதேனும் ஒரு கருவி.
செய்முறை:
- பிளாஸ்டிக் ட்ப்பாவின் ஒரு ஓரத்தின் நடுப்பாகத்தில் ( செவ்வக வடிவமாக இருந்தால் குறுகலான பக்கத்தை பயன்படுத்தவும்) அடிப்பகுதியில் இருந்து சுமார் ஒரு செண்டி மீட்டர் உயரத்தில் ஸ்ட்ரா நுழையும் அளவுக்கு துளையிடவும்.
ஸ்ட்ராவின் ஒரு முனையில் பலூனை மாட்டி ரப்பர் பேண்டை கவனமாக சுற்றவும்.
ஸ்ட்ராவின் மற்றொரு முனையை டப்பாவில் இட்ட துளையின் வழியே செலுத்தி சுமார்  மூன்று செ.மீ. அளவு வெளியில் இருக்குமாறு அமைத்து துளையை சுற்றி இருக்கும் இடைவெளியை எம் சீல் கொண்டு நன்றாக மூடிவிட்டு காயவிடவும்.
காய்ந்த பின்னர் எடுத்து ஸ்ட்ராவின் வெளிமுனை உதவியால்  காற்றை ஊதி பலூனை பெரிதாக்கி, ஸ்ட்ராவின் துளையை விரலால் மூடிக்கொண்டு அகலமான பாத்திரத்தில் உள்ள தண்ணீரில் விடவும். படகு ஓரளவு அமுங்குவதற்க்கு சிறிய பருமமான பொருட்களை உள்ளே வைக்கவும்.
தண்ணீரில் படகு உந்திக்கொண்டு செல்லும் காட்சியை கண்டு மகிழுங்கள்
விளக்கம்:
இந்த இயக்கம்  நியூட்டனின் மூன்றாவது விதிக்கு  ஒரு உதாரணமாகும். – ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர் மற்றும் சமமான எதிர்வினை உண்டு. காற்று ஸ்ட்ரா வழியாக அழுத்தத்துடன் வெளியேறுவது ஒரு வினை.அதனால் ஏற்படும் எதிவினை காரணமாக  படகு எதிர்திசையில் பயணிக்கிறது.
இந்த படகை இன்னும் மேம்படுத்த என்ன செய்யலாம் ?

No comments:

Post a Comment