அம்பானிகளும் ,டாடாக்களும் ஆய்வுக்கு நிதி கொடுக்க வேண்டும் :- பேராசிரியர் ராவ்


பெங்களூரு பிரஸ் கிளப் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசிய ராவ் கூறியதாவது: இந்தியாவில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அறிவியலுக்கு 0.9 சதவீதம் தான் அரசு ஒதுக்கி செலவிடுகிறது.மேலும் அதற்கு ஆகும் செலவுக்கு மீணடும் அரசே பணம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. அதாவது தொழில்துறையிலிருந்து பங்களிப்பு கிடையாது. இது மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது எதிர்மறையாகவே உள்ளது.அதாவது அமெரிக்க மற்றும் ஜப்பான் எடுத்துக்கொண்டால் 50 சதவீதத்திற்கும் மேலாக தொழில்துறையிலிருந்து பணமாக கிடைக்கிறது.
பெங்களூரு: இந்தியாவில் அறவியல் கண்டுபிடிப்பு ஆய்வுகளுக்கு அம்பானிகளும், டாடாக்களும் நிதி கொடுக்க வேண்டும் என்றும் தனியார் துறையின் ஆதரவு பெரிய அளவில் தேவை என விஞ்ஞானி மற்றும் பாரத ரத்னா விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவருமான பேராசிரியர் ராவ் ராவ் தெரிவித்துள்ளார்.
தனியார் துறை பங்களிப்பு தேவை:
அம்பானிகளும் டாடாக்களும் அறிவியல் நன்மைகளை நிறைய பெற்றிருப்பர்.அதனால் அவர்கள் தங்களது பங்களிப்பு இருக்க வேண்டும் என்றார் ராவ். அரசு பணம் ஒதுக்கீடு செய்வது 2 சதவீதம் உயர்த்துவதாக உறுதி கூறியிருக்கிறது. பார்ப்போம் இது நான்கு அல்லது 5 ஆண்டுகளில் நடக்கும் என நம்புகிறேன்.மேலும் நிறுவனங்களை உருவாக்கும் கல்வி முறையை மேம்படுத்த அரசு எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.கல்வியை மேம்படுத்துவது என்பது அதன் தரத்தில் உள்ளது. அதாவது சமூகத்தின் போக்கு மாற வேண்டும், மேம்படுத்த வேண்டும்.
குழந்தைகளை பி.எஸ்.சி., மட்டுமே படிப்பு என அதில் தள்ளிவிடக்கூடாது.தனி அறிவு திறன் மட்டும் போதாது. பல்துறை அறிவு திறன் முக்கியமானது.15 ஆண்டுகளாக நான் இங்கிருந்து பார்க்கும் போது பீகார், மேற்கு வங்கம் மற்றும் ஆந்திராவிலிருந்து வருபவர்கள் ஐ.டி., வங்கி, வர்த்தகம் மற்றும் மற்ற வேலைவாய்ப்புகளுக்கு தான் வருகிறார்கள். நான் தகவல் தொழில்நுட்பத்திற்கு எதிரானவன் அல்ல. மற்ற துறைகளும் திறமையானவர்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.பெங்களூரு தகவல்தொழில்நுட்பத்திற்கு பெயர் பெற்றது என அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் அதை நாம் அறிவியல் நகராக பார்க்க துவங்க வேண்டும் என்றார் ராவ்.  நன்றி -தினமலர்  , 24.11.2013
Click Here

No comments:

Post a Comment